Thursday 31 January 2013

கானல் நீர் உறவுகள்...

கருக்கொண்ட கனவுகளை

கருவிலேயே சிதைத்துவிட்டு
அருவமாய் ஓரு கரியமூலைக்குள்
சுருண்டு போகிறேன்.... என்
கசந்த பார்வையில்
குவியம் தொலைந்து போன
காட்சிகளாய் உலக உறவுகள்
கையேந்தி நிற்கா கடினமனம்...
பிடிவாதம் உடுத்திக்கொண்ட
பிச்சைக்காரியாய்...பாசத்தைத் தேடி
நாவரண்டு தவித்த போது
தாகம் தீர்க்கும் பேராறு போல்
நீண்ட கரங்களையெல்லாம்...
தேடித்தேடி தோற்கிறேன்
தொண்டை வற்றிய பின்
தோன்றும் கானல் நீராய் அவை..

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

Tuesday 29 January 2013

நீ வரவில்லை...

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

Sunday 27 January 2013

பாசத்தவிப்பு.....

பாதி நாட்கள் கனவில் என்
பாலகர்கள் வருகிறார்கள்...
பார்த்துப் பார்த்துகேட்கிறார்கள்... அம்மா...
பத்து மாதம் சுமந்தாயாமே..
எப்படியம்மா என்னை விட்டுப் போனாய்...
அப்படி நான் பிழை என்ன செய்தேன்...
அடுத்தவள் கேட்கிறாள்....
படுக்கையிலே காய்ச்சலாகி படுத்தேனே அம்மா...
பரிவோடு வருடிய கரங்கள்...
அவை உன்னுடையவை இல்லையே...
பாலூட்டும் போது அணைத்தவளைப் பார்த்தேன்
அதுவும் நீயில்லையே அம்மா..
தடுக்கி விழுந்து அம்மா என்றழுத போது
தழுவ நீ வருவாய் என நினைத்தேன்... வரவில்லையே...
உன் அருகாமையே எனக்கு மறந்து விட்டதே..
பாசமா???? அள்ளியணைத்து
முத்தமிட முடியாமல் இருக்கும் உனக்குள் அது இன்னும் பசுமையாய் இருக்குதாம்மா????
மொத்தத்தில் நாங்கள் உன்
அணைப்புக்காக ஏங்குவதை
எப்போது முடித்துக் கொள்வாய்....
அம்மா என்று வாய் நிறைய அழைக்கும் போது
அள்ளியணைக்க எப்போது வருவாய்...
அம்மா...அம்மா...அம்மா...
அழுகுரல் என் காதுகளைக் கிழிக்கிறது...
குழந்தைகளுக்குப் புரியாதது.. என் உணர்வுகளா..
அல்லது...
எனக்குப் புரியாதது அந்தப் பிஞ்சுகளின் ஏக்கங்களா...
ஆண்டவா உம்மைத் தான் கேட்கிறேன்...
அடுக்குமா இந்தப் பழி உமக்கு...
பதில் சொல்லுங்கள்...

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

தந்தை

ஏன் தாயை மட்டும் போற்றுகிறார்...
என் தந்தையும் ஒரு தாய் தானே-தாய்
பத்துமாதம் சுமந்து பெறுகையில்
உறுதுணையாய் இருந்தவர் தந்தை தானே...
நான் தாயை இகழ்ந்து பேசவில்லை...
இருவரும் நமக்கு பெற்றோர்தான்..

-அனங்கன்-

இது என் மகன் எழுதிய கவிதை...

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

Saturday 26 January 2013

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

Tuesday 22 January 2013

முத்தம்...

சுருங்கிக் கிடக்கும் மூளைக்குள்
சுளீரென்ற ஒரு தாக்குதல்……
சுதாகரித்துக் கொள்ளுமுன்
சுழன்றெழுந்த சுனாமி……
சில்லென்று எனக்குள் சிலிர்த்து
சிதறடித்த பனிப் பந்து…..
அன்பென்ற தகவல் சொன்ன
திண்ணிய முத்திரை……

மின்னல் வெட்டும் நேரத்துள்
மென்மையாய் பதித்து
பெண்மைக்குள் பதுங்கிக்கிடந்த
உண்மை ஏக்கத்தை உணர்த்தி நின்ற
வண்ணப் பூந்தென்றலின் வருடல் அது..

உணர்வுகள் உலுப்பிய உதடுகள் எங்கோ அந்த
உதடுகள் தாங்கிய உருவம் எங்கோ.. அவை
ஊற்றிச் சென்ற உணர்வுகள் மட்டும்-தீ
மூட்டி நெஞ்சைப் பரவசமூட்டும்
தூக்கிச் சென்று நிலாவில் அமர்த்தும்…
பூக்களின் மடியில் தாலாட்டி நிற்கும்

நீண்ட காலத் தாகம் தீர்க்க- காலம்
தாண்டி என்னை மூழ்கடித்த தீர்த்தம்..
ஆண்டுகள் ஆயிரம் போனாலும்
மாண்டு போகா நினைவிது..

வாழ்வில் இனிமேலும்
பெறற்கரிய முத்து.. அந்த
மறக்க முடியா முத்தம்…

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

Sunday 6 January 2013

இதயத்துடிப்பு

இறைவன் படைத்த ஆறே...

அதன் அழகிய நீரே என்

இதயத்துடிப்பை அறியமுடியவில்லையா

இறைவன் படைத்த மரமே அதன்

அழகிய முக்கனியே

என் இதயத் துடிப்பை அறிய முடியவில்லையா...

இறைவன் படைத்த பூமியே அதன்

மேலுள்ள வானமே

என் இதயத் துடிப்பை அறியமுடியவில்லையா

இவை எல்லாவற்றையும்

படைத்த இறைவா நீர்

என் இதயத்துடிப்பை அறிந்துள்ளீர்

இதற்காக உமக்கு ஸ்தோத்திரங்கள்....

(இது என் மகன் அனங்கன் -வயது 9 எழுதிய கவிதை.. குழந்தை கவிஞ்னாய் உருவாகும் அவனைப் பெருமையோடு அறிமுகம் செய்கிறேன்... )

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!